என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஆசிரியர் பகவான்
நீங்கள் தேடியது "ஆசிரியர் பகவான்"
பணிமாறுதலின்போது மாணவர்களின் ஆதரவு பெற்ற ஆசிரியர் பகவான் கமல்ஹாசனை சந்திக்க மறுப்பு தெரிவித்துள்ளார். #TeacherBhagavan #KamalHaasan
சென்னை:
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிபவர் கோவிந்த் பகவான். இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு பணிமாறுதலுக்கான அறிவிப்பு வந்தது. இதை அறிந்த அந்த பள்ளி மாணவர்கள் அவரை பணிமாறுதல் செல்வதற்கு அனுமதிக்க முடியாது என்று கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இது தமிழகம் முழுவதும் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆசிரியர், மாணவர்களுக்கு இடையேயான நல்லுறவுக்கு கோவிந்த் பகவான் சிறந்த உதாரணம் என்று பலரும் பாராட்டினார்கள்.
இதுகுறித்து ஆசிரியர் கோவிந்த் பகவானை செல்போனில் தொடர்புகொண்டு கேட்டதற்கு, ‘கமல்ஹாசன் என்னை சந்தித்து கவுரவப்படுத்த இருப்பதாகவும், கட்சி தலைமை அலுவலகத்துக்கு வரவேண்டும் என்றும் என்னிடம் அவருடைய கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால் நான் மறுத்துவிட்டேன். ஏனென்றால் நான் அரசு பணியில் இருக்கிறேன். கமல்ஹாசன் கட்சியில் இருக்கிறார். அப்படி இருக்கும் போது இந்த சந்திப்பு சரியாக இருக்காது’ என்றார். #TeacherBhagavan #KamalHaasan

இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ஆசிரியரை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவிக்க இருப்பதாகவும், இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு கட்சி தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
இதையடுத்து நேற்று பிற்பகலில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்துக்கு பத்திரிகையாளர்கள் சென்றனர். ஆனால் கடைசி நேரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் வரவில்லை என்றும், பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆசிரியர் கோவிந்த் பகவானை செல்போனில் தொடர்புகொண்டு கேட்டதற்கு, ‘கமல்ஹாசன் என்னை சந்தித்து கவுரவப்படுத்த இருப்பதாகவும், கட்சி தலைமை அலுவலகத்துக்கு வரவேண்டும் என்றும் என்னிடம் அவருடைய கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால் நான் மறுத்துவிட்டேன். ஏனென்றால் நான் அரசு பணியில் இருக்கிறேன். கமல்ஹாசன் கட்சியில் இருக்கிறார். அப்படி இருக்கும் போது இந்த சந்திப்பு சரியாக இருக்காது’ என்றார். #TeacherBhagavan #KamalHaasan
இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் மாணவர்களின் பாச போராட்டத்தால் அதே பள்ளியில் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டு, தனது பணியை தொடங்கினார். #TeacherBhagawan
பள்ளிப்பட்டு:
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள வெளியகரம் அரசினர் உயர்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் பகவான். இவர் சில தினங்களுக்கு முன் பணிநிரவலில் திருத்தணியை அடுத்த அருங்குளம் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார்.
இதையடுத்து வெளியகரம் பள்ளியில் பணி விடுவிப்பு கடிதம் பெற்று திரும்பிய பகவானை மாணவ-மாணவிகள் வழிமறித்து வேறு பள்ளிக்கு செல்லக்கூடாது என்று கதறி அழுதனர்.
இதையடுத்து ஆசிரியர் பகவான் அதே பள்ளியில் தொடர்ந்து 10 நாட்கள் பணியாற்ற அதிகாரிகள் அனுமதி வழங்கினார்கள். மாணவர்கள் ஆசிரியர் பகவானை வழிமறித்து கதறி அழுதபோது தலைமை ஆசிரியர் அரவிந்த் மாணவ-மாணவிகளையும், அவர்களது பெற்றோரையும் அமைதிபடுத்த பகவானுக்கு வழங்கிய பணி விடுவிப்பு கடிதத்தை அவர்கள் முன்னால் கிழித்து எறிந்தார்
இதையடுத்து மாணவ- மாணவிகளும், அவர்களது பெற்றோர்களும் அமைதியாகி கலைந்து சென்றனர். இந்த நிலையில் ஆசிரியர் பகவானுக்கு கடந்த வெள்ளிக்கிழமை பணி விடுவிப்பு கடிதம் வழங்கப்பட்டு அவர் சனிக்கிழமை அருங்குளம் பள்ளிக்கு சென்று பணியில் சேர்ந்துவிட்டார்.
இந்த நிலையில் மாணவர்களின் பாச போராட்டம் மற்றும் பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று ஆசிரியர் பகவானை வெளியகரம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் மாற்றுபணியில் பணியாற்ற கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து ஆசிரியர் பகவான் கடந்த திங்கட்கிழமை முதல் மாற்றுப்பணியில் வெளியகரம் பள்ளியிலேயே தனது பணியை தொடங்கினார். #TeacherBhagawan #tamilnews

ஆசிரியர் பகவான் இடமாற்றத்தை எதிர்த்து மாணவர்கள் பாசப் போராட்டம் நடத்திய பள்ளியில் ஆய்வு செய்த கல்வி அதிகாரி ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார்.
பள்ளிப்பட்டு:
பள்ளிப்பட்டு அருகே உள்ள வெளியகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் பகவான்.
5 ஆண்டுகள் பணியாற்றிய அவருக்கு திருத்தணி அருகே உள்ள அருங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.
ஆசிரியர் மீது பாசம் கொண்ட மாணவ-மாணவிகள் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு பள்ளி கதவை இழுத்து மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே ஆசிரியர் பகவான் பணி விடுப்பு உததரவு பெறுவதற்காக நேற்று முன்தினம் வெளிய கரம் பள்ளிக்கு வந்தார். அப்போது அவரை பிரிய மனமில்லாத மாணவ-மாணவிகள் அவரை தடுத்து நிறுத்தி பள்ளியை விட்டு செல்ல வேண்டாம் என்று கதறி அழுதனர்.
சில மாணவர்கள் அவரை கட்டி அணைத்து கெஞ்சினர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர்களுக்கும், ஆசிரியருக்கும் உள்ள நெருக்கத்தை அறிந்து பலர் நெகிழ்ந்தனர்.
இதையடுத்து ஆசிரியர் பகவான் இதே பள்ளியில் 10 நாட்களுக்கு தொடர்ந்து பணி செய்ய பள்ளிக் கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது.
இந்த நிலையில் வெளிய கரம் பள்ளிக்கு உதவி தொடக்க கல்வி அலுவலர் அருச்செல்வம் மற்றும் அதிகாரிகள் இன்று காலை ஆய்வு செய்ய வந்தனர்.
அவர்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

×

X